இணையே என் உயிர் துணையே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: தடம்

பாடகி : பத்மலதா

பாடகர் : சித் ஸ்ரீராம்

இசை : அருண் ராஜ்

வரிகள்:மதன் கார்க்கி

ஆண் : இணையே என்

உயிர் துணையே உன்

இமை திறந்தால் நான்

உறைவது ஏனடி

 அழகே என் முழு உலகம் உன் விழிகளிலே கண்

உறங்குது பாரடி

ஆண் : அருகே 

நீ இருந்தால்

என் கைப்பேசி வாய் மூடுமே

தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்

என் தண்ணீரில் தேன் கூடுமே

பெண் : இணையே என்

உயிர் துணையே உன்

இனிமையிலே நான்

கரைவது ஏனடா

 யுகமாய்

கை விரல் பிடித்து நாம்

நடப்பது போல் நான்

உணர்வது ஏனடா

இணையே

ஆண் : மையல் காதலாய்

மாறிய புள்ளி என்றோ

மனம் கேட்குதே

பெண் : காதல் காமமாய்

உருகொண்ட தருணம்

நினைக்கையில் உயிர்

வேர்க்குதே

ஆண் : உடல் மேல்

பூக்கும் நீரோடு நீராட்டியே

சில நாள் என்னை சுத்தம் செய்தாய்

பெண் : எந்தன் சேவைகள்

எல்லாமே பாராட்டியே

எந்தன் ஆடைகள் மீண்டும் தந்தாய்

ஆண் : இணையே என்

உயிர் துணையே உன்

இனிமையிலே நான்

கரைவது ஏனடி

பெண் : யுகமாய் கை

விரல் பிடித்து நாம்

நடப்பது போல் நான்

உணர்வது ஏனடா

ஆண் : அருகே நீ இருந்தால்

என் கைப்பேசி வாய் மூடுமே

தலை சாய்த்து நீ சிரித்தாயெனில்

என் தண்ணீரில் தேன் கூடுமே

ஆண் & பெண் : இணையே

என் உயிர் துணையே உன்

இனிமையிலே நான் கரைவது ஏனடி

 யுகமாய் உன் விரல்

பிடித்து நாம் நடப்பது போல்

நான் உணர்வது ஏனடி

ஆண் : இணையே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்