உள்ளமே உனக்குத்தான் உசுரே உனக்குத்தான்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: கோபுர தீபம்

ஆண்டு:1997

இசை:சௌந்தர்யன்

பாடியவர்கள்:S.P.B & அனுராதா ஸ்ரீராம்

✨✨✨✨✨✨✨✨✨

ஆண்: உள்ளமே உனக்குத்தான் உசுரே உனக்குத்தான்

உன்னையும் என்னையும் பிரிச்சா உலகமில்லையே

தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே

வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்

இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்

பெண்: உள்ளமே உனக்குத்தான் உசுரே உனக்குத்தான்

உள்ளமே உனக்குத்தான் உசுரே உனக்குத்தான்

ஆண் : பார்த்ததும் இரண்டு விழியும் இமைக்க மறந்துப்போச்சு

குரல கேட்டதும் கூவும் பாட்ட குயிலும் மறந்துப்போச்சு

பெண் : தொட்டதும் செவப்பு சேலை இடுப்ப மறந்துப் போச்சு

இழுத்து சேர்த்ததும் பேசவந்ததில்  பாதி மறந்துப் போச்சு

ஆண்: சுந்தரி உன்னையும் என்னையும் பிரிச்ச காலம் போச்சு

பெண் :என் ராமனே  உன்னை கண்டதும் கிழக்கு வெளுக்கலாச்சு??

 ஆண்: உறவு தடுத்த போதும்.... உயிர் கலந்தாச்சு

பெண்: உனக்கு சேர்த்து தானே.... நான்விடும் மூச்சு

ஆண் :வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்

இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்

பெண்: உள்ளமே உனக்குத்தான் உசுரே உனக்குத்தான்

உள்ளமே உனக்குத்தான் உசுரே உனக்குத்தான்

பெண்: மாமனே முயற்சி இருக்கு உன்னையும் என்னையும் பிரிக்க

சிறுக்கி கேட்குறேன்  குளத்து தண்ணியை குடத்தில் எப்படி அடக்க??

ஆண் : காதலி எழுதியிருக்கு  மனசும் மனசும் கலக்க

அடியே முடியுமா கல்லு எழுத்த காத்து வந்து அழிக்க

பெண் : கண்ணனே உன்னை காண உசிரு கிடந்து துடிக்க

ஆண்: அழகு ராணியே இதய துடிப்ப எந்த தாவணி மறைக்க

பெண்: மனசு திறந்து பேச.... மகிழ்ச்சி பிறக்க

ஆண்: மவுசு கூடி வந்து..... கண்ணுபட படக்க

வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்

இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்

பெண்: உள்ளமே உனக்குத்தான் உசுரே உனக்குத்தான்

உன்னையும் என்னையும் பிரிச்சா உலகமில்லையே

தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே

வாழ்ந்தால் உன்னோடு மட்டுமே வாழுவேன்

ஆண் : இல்லையேல் மண்ணோடு போய் நான் சேருவேன்

பெண்: உள்ளமே உனக்குத்தான் உசுரே உனக்குத்தான்

ஆண்: உன்னையும் என்னையும் பிரிச்சா உலகமில்லையே

பெண்: தண்ணிக்கும் மீனுக்கும் என்னைக்கும் வில்லங்கமில்லையே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்