என் ரகசிய கனவுகள் ரசிக்கிற வகையினில்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:அலை

ஆண்டு:2003

இசை:வித்யாசாகர்

பாடியவர்கள்: கார்த்திக் ஸ்ரீ வர்த்தினி 

✨✨✨✨✨✨✨✨✨

என்  ரகசிய  கனவுகள்  ரசிக்கிற  வகையினில்

ரகளைகள்  செய்பவனா ?

என்  அழகிய  நினைவினில்  அடிக்கடி  நுழைந்தொரு

அழும்புகள்  செய்பவனா ?

மழை போலே  வருவானா ?

மடி  மேலே  விழுவானா ?

மலர்  போலே  தொடுவானா  ? தொடுவானா ?

இவன்  தானா ? இவன்  தானா ?

இவனோடு  இணைவேனா? (2)

✨

(என்  ரகசிய ...)

✨

ஒரு  முறை  பார்க்கையில்  பனியென  உருகினேன்

மறுமுறை  பார்க்கையில்  தீயிலே  வேகிறேன்

✨

கண்களால்  நெஞ்சிலே  காயங்கள்  செய்கிறாய்

மோகத்தின்  பஞ்சினால்  ஒத்தடம்  வைக்கிறாய்  

✨

இமைக்கும்  பொழுதில்  இதயம்  தொலைத்தேன்

எனக்குள்  விழுந்தேன்  உனக்குள்  எழுந்தேன்

✨

காதல்  நீரிலே  மூழ்கி  போகிறேன்

கையை  நீட்ட  வா  கரையில்  சேர்க்க  வா ...

இவன்  தானா ? இவன்   தானா ?

இவனோடு  இணைவேனா  ?

✨

என்  ரகசிய  கனவுகள்  ரசிக்கிற  வகையினில்

ரகளைகள்  செய்பவளா ?

என்  ரகசிய  கனவுகள்  ரசிக்கிற  வகையினில்

ரகளைகள்  செய்பவனா ? செய்பவனா ?

✨

தூரத்தில்  நின்றென்னை  ரசிப்பது  போதுமா ?

தூரத்து  வெண்ணிலா  தாகங்கள்  தீர்க்குமா ?

✨

வெட்கத்தை  வீசியே  வா  என  சொல்கிறாய்

பக்கத்தில்  வந்ததும்  பத்தியம்  என்கிறாய்

அணைப்பாய்   என  நான்  தவியாய்  தவித்தேன்

இருந்தும்  வெளியே  பொய்யாய்  முறைத்தேன்

✨

கன்ன  குழிகள்  தான்  காதல்  தேசமா ?

ஈர  முத்தம்  தான்  இன்ப  தீர்த்தமா ?

இவள்  தானா ? இவள்  தானா ?

இவளோடு  இணைவேனா    ?

✨

(என்  ரகசிய ...)

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்