சோஃபியா சோஃபியா... சோஃபியா சோஃபியா...

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:99 சாங்ஸ்

இசை: A.R.R

வரிகள்: மதன் கார்க்கி

பாடியவர்: ஸ்ரீகாந்த் ஹரிஹரன்

✨✨✨✨✨✨✨✨✨

யாரும் கேளா என் பாடல் ஒன்றை

நீ மட்டுமே கேட்கிறாய்!

தனிமைதான் எந்தன் துணை என்று வாழ்ந்தேன்

எல்லாமே நீயாகிறாய்!


உடைந்தே கிடந்தேன் சோஃபியா

ஆயிரம் துண்டென

அணைத்தே இணைத்தாய் சோஃபியா

ஆகினேன் ஒன்றென


சுடாமலே தீண்டிய தீ போலே

காதல் பேசுகிறாய்

இருளின் கடைசித் துளிகள் காய

எரிகின்றாய் தீபமாய்!


உன் மௌனத்திலே சோஃபியா

தாய்மொழி கேட்கிறேன்

உன் கண்களினால் சோஃபியா

உண்மையாய் ஆகிறேன்!

 

அழகால் உயிரைத் தொடுவாய்

சிரிப்பால் என்னைப் பந்தாடுவாய்

இனிமை இமையால் மனதுள் வீசுவாய்

இசையின் சாரல் அமுதாய் மாற்றுவாய்

தினம் நெஞ்சிலே புலராய் மலர்வாய்


விரல்கள் கோக்கையில் சோஃபியா

பூமியே கையிலே

இதழ்கள் கோக்கையில் சோஃபியா

வானமே நாவிலே

 

சுடாமலே தீண்டிய தீ போலே

காதல் பேசுகிறாய்

இருளின் கடைசித் துளிகள் காய

எரிகின்றாய் தீபமாய்!


சோஃபியா சோஃபியா...

சோஃபியா சோஃபியா...

சோஃபியா சோஃபியா...

சோஃபியா சோஃபியா…


உடைந்தே கிடந்தேன் சோஃபியா

ஆயிரம் துண்டென

அணைத்தே இணைத்தாய் சோஃபியா

ஆகினேன் ஒன்றென

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்