சீரடி பாபாவே….

 "ஸாய்நாமமே மந்திரம்"

ஆல்பம்

பாடியவர்:ஸ்ரீஹரி

✨✨✨✨✨✨✨✨✨

பாபா.. சாயி பாபா 

ஷீரடி வாழும் சாயி பாபா.. 

ஷீரடி வாழும் சத்குரு நாதா 

சீரடி தொழுதேன் சிவகுறு நாதா 

நாளும் பொழுதும் நலமாய் வாழ அருள்வாய் பகவானே


சீரடி பாபாவே…. 

சீரடி பாபாவே.. 

ஞான ரூபனே 

தவ யோக நாதனே பாதம் என்பது கங்கை நதி மூழ்கிட மாறிடும் ஜென்ம விதி 

உடலும் பொருளும் அர்ப்பணம் செய்தேன் சாயி பாபாவே..

தாமரைப் பாதமோ, உனது முகம் மல்லிகை மென்மையோ 

ஆயிரம் ஆயிரம் பூக்கள் மணக்கும் மலரின் மன்னவனோ 

பாபா நீயே மலரானாய் மனமெனும் பூவை சமர்ப்பனமாய் 

அடிமலர் வைத்தே அண்டி இருந்தேன் சாயி பாபாவே.. 

மலரினை போலே மலர்ச்சி தந்து திருவடி சேர்ப்பாய் பாபாவே

தங்கமோ வெள்ளியோ ஒளி உமிழும் வைர வைடூரியமோ 

மரகத முத்து நீளம் கலந்த மாணிக்க மணிமகுடா 

சீரடி வாழும் பொற்குடமே நவமணி உயிரை சமர்ப்பனமாய் செம்பவளத்திரு அடி நிழல் வைத்தேன் சத்குரு பாபாவே பொன்மணிகாரமாய் எனை சுமந்தே ஓங்கிட வைப்பாய் சாய் பாபா

(சீரடி வாழும்..)

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்