ராசாவே ராசாவே உன்னை எண்ணி

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: பூவரசன்

ஆண்டு: 1996

பாடியவர்கள்: S.P.B &K.S.சித்ரா

இசை: இளையராஜா

வரிகள்: வாலி

✨✨✨✨✨✨✨✨✨

ராசாத்தி ராசாத்தி

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேனடி

ராசாத்தி ராசாத்தி

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேனடி

செந்தாழம் பூவே

சிறுகூடல் முத்தே

முத்துப்பூ சூடிக்கொள்ளூம்

நாள் சொல்லடி

ராசாவே ராசாவே

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேன் இங்கே

ராசாவே ராசாவே

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேன் இங்கே

ஏரிக்கரை காத்தப்போல

என் மனசு லேசாச்சு

ஏறி நின்னு உந்தன் மேல

ஆசை கொண்டு அலையாச்சு

தூண்டில் போட்டு மீனுக்காக

காத்திருக்கும் ராசாவே

தூண்டில் முள்ளில் சிக்கிப்போச்சு

என் மனசு லேசாவே

எப்போதும் ஏங்கும் ஏழையப் போல

முப்போதும் நெஞ்சம் உன் பின்னாலே

அன்பாலே ஏழைகள் சீமானய்யா

நீதானே எந்தன் கோமானய்யா

ராசாவே ராசாவே

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேன் இங்கே

ராசாவே ராசாவே

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேன் இங்கே

அஞ்சுகத்தின் கல்யாணத்தை

ஆசையோடு பார்த்தேனே

கொஞ்சி வந்த நாதஸ்வர

ஒசை ஒன்று கேட்டேனே

என்னை வந்து மாப்பிள்ளையா

மணவறையில் பார்த்தாயா

உன்னை என்னை ஜோடியாக்கி

ஒன்றில் ஒன்று சேர்த்தாயா

நாம் என்று கேட்டோம் நாயன ஓசை

நாளாகும் போது பெருகுது ஆசை

மீனாட்சியம்மா கண் பார்க்கணும்

மாறாமல் நம்மை கை சேர்க்கணும்

ராசாத்தி ராசாத்தி

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேனடி

ராசாத்தி ராசாத்தி

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேனடி

செந்தாழம் பூவே

சிறுகூடல் முத்தே

முத்துப்பூ சூடிக்கொள்ளூம்

நாள் சொல்வா

ராசாவே ராசாத்தி

ராசாவே ராசாத்தி

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேனடி

ராசாவே ராசாத்தி

ராசாவே ராசாத்தி

உன்னை எண்ணி

மனம் உருகி நின்றேனடி

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்