ஒரு சுந்தரி வந்தாளாம் நல்ல அந்தியில் பூத்திடும் பூப் போல

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: அழகி

ஆண்டு:2002

இசை: இளையராஜா

பாடியவர்கள்: உன்னி க்ருஷ்ணன்,சாதனா சர்கம், மால்குடி ஷுபா

வரிகள்:பழனி பாரதி

✨✨✨✨✨✨✨✨✨

ஆஹாஹ ஹாஹா ஆஹாஹ ஹா

ஆஹா ஆஹா ஆ...

நேசம் நெறஞ்ச மனம் போல்

வாசம் வீசும் மலர் போல்

நதிக் கரையில பொறந்தேன்

இந்த ஒலகம் மறந்து

உதிர்ந்து விழுந்து நதியில்

பொரண்டு பொரண்டு அலையில்

இழுக்கும் திசையில் மிதந்தேன்

அது தடுக்க மறந்து

ஓடும் நதி எல்லாம்

அந்தக் கடலில் கலக்குமா

வாழும் இசை காற்றில்

சென்று கலக்க மறுக்குமா

எல்லார்க்கும் எதிர்பார்ப்பு

எத்தனை எத்தனையோ

என்னைப் போல் தனியாக

வாழ்வது எத்தனையோ

ஒரு சுகம் இல்லாதவர் சொர்கக் குழந்தைகளே

ஒரு சுந்தரி வந்தாளாம்

நல்ல அந்தியில் பூத்திடும் பூப் போல

பூப் பந்து அடிச்சாளாம்

துள்ளித் துள்ளிக் குதிக்கிற மீன் போல

ஆ... ஆ... ஆஹாஹா...

ஆஹா ஆ... ஆஹாஹா...

நன்றாக வாழ்ந்தால்

எல்லோரின் கண்கள் திரும்பும்

உந்தன் மீதிலே

இல்லாது போனால்

சொல்லாத கதைகள் சொல்லும்

தங்கள் மொழியிலே

தன்னையே நொந்து வாழ்ந்திருந்தால்

எதைத் தான் முடிப்பாய் எண்ணிடுவாய்

எல்லோர்க்கும் குறைகள் உண்டு

ஏக்கம் எதற்கு

தன்னையே தாழ்த்திக்

கொண்டு தவித்தாய் எதற்கு

மண் மீது வீசினாலும்

பொன் மாற்றுக் குறையுமா

தீயினில் சுட்டாலும்

மின்னி மின்னி ஜொலிக்கும்

தங்கம் தங்கமடி

ஒரு சுந்தரி வந்தாளாம்

நல்ல அந்தியில் பூத்திடும் பூப் போல

பூப் பந்து அடிச்சாளாம்

துள்ளித் துள்ளிக் குதிக்கிற மீன் போல

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்