மகனே மகனே கண்ணுறங்கு மழலை கிளியே கண்ணுறங்கு

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:வரம்

ஆண்டு:1989

பாடியவர்:P.சுசீலா

இசை:M.S.விஸ்வநாதன்

வரிகள்:புலமைப் பித்தன்

✨✨✨✨✨✨✨✨✨

பெண்: மகனே மகனே கண்ணுறங்கு 

மழலை கிளியே கண்ணுறங்கு 

கனவும் வராமல் அமைதி கெடாமல் கண்ணே நீ உறங்கு 

கொஞ்சம் உன்னை நீ மறந்து

பெண்: கஸ்தூரி மான் ஒன்று கண்ணுறங்கும் நேரம்

 கார்க்கால மேகங்கள் தாலாட்டு பாடும் உஷ்.. பேசக்கூடாது யாரும் பேசக்கூடாது ஆரிராரிரோ. ஆரிராரிரோ..

பெண்: நாடாளும் ராஜாங்கம் உன்னை வந்து தேடும் 

பாராட்டி தோளோடு பூமாலை சூடும் நாடாளும் ராஜாங்கம் உன்னை வந்து தேடும் பாராட்டி தோளோடு பூமாலை சூடும்

பெண்: பட்டாளம் நீ சொல்லும் கட்டளையை கேட்கும்

 பாசத்தில் என் கண்கள் பன்னீரை வார்க்கும் 

ஏழு ஜென்மங்கள் வாழும் இந்த இன்பங்கள் ஆரிராரிரோ. ஆரிராரிரோ..

பெண்: மகனே மகனே கண்ணுறங்கு 

மழலை கிளியே கண்ணுறங்கு 

கனவும் வராமல் அமைதி கெடாமல் கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து

பெண்: கல்யாண நாளொன்று நாளை வந்து சேரும் 

பாராட்டும் மேளங்கள் பல்லாண்டு பாடும் கல்யாண நாளொன்று நாளை வந்து சேரும் பாராட்டும் மேளங்கள் பல்லாண்டு பாடும்

பெண்: அன்பான நெஞ்சங்கள் உன்னை வந்து வாழ்த்தும் ஆனந்த கண்ணீரில் என் உள்ளம் நீந்தும் 

போகும் ஊர்க்கோலம் அங்கே வானம் பூத்தூவும் 

ஆரிராரிரோ. ஆரிராரிரோ..

பெண்: மகனே மகனே கண்ணுறங்கு

 மழலை கிளியே கண்ணுறங்கு 

கனவும் வராமல் அமைதி கெடாமல் கண்ணே நீ உறங்கு கொஞ்சம் உன்னை நீ மறந்து.

பெண்: கஸ்தூரி மான் ஒன்று கண்ணுறங்கும் நேரம் 

கார்க்கால மேகங்கள் தாலாட்டு பாடும் 

✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்