இங்கே இறைவன் என்னும் கலைஞன்

 ✨✨✨✨✨✨✨✨

படம் :சார் ஐ லவ் யூ 

ஆண்டு: 1991

பாடியவர்கள் :மனோ- பி.சுசிலா

இசை :இளையராஜா

✨✨✨✨✨✨✨✨

இங்கே இறைவன் என்னும் கலைஞன்

இங்கே இறைவன் என்னும் கலைஞன்

என்றோ உலகை நன்றாய் படைத்தான்

உண்மைகள் வந்து என் மனத்தாட

வார்த்தைகள் இல்லை நான் கவிபாட

என்னென்ன அழகே ஓ.

இங்கே இறைவன் என்னும் கலைஞன்

என்றோ உலகை நன்றாய் படைத்தான்

ஆ..அஹ ஹ ஹா ஆ .. ஆ அஹ ஹ ஹா ஆ

பனியின் துளி சூடியே கொடியில் மலர் ஆடுதே

நதியின் அலை நாளுமே கரையில் இடும் தாளமே

காலமே நீயும் நீர் போல் வேகமாய் ஓடலாம்

வருவார் போவார் நிலையாய்

இங்கே நீதான் உண்டு

அழகே ஹோய்

இங்கே இறைவன் என்னும் கலைஞன்

என்றோ உலகை நன்றாய் படைத்தான்

உண்மைகள் வந்து என் மனத்தாட

வார்த்தைகள் இல்லை நான் கவிபாட

என்னென்ன அழகே ஹோய்

இங்கே இறைவன் என்னும் கலைஞன்

என்றோ உலகை நன்றாய் படைத்தான்

ஆ..அஹ ஹ ஹா ஆ .. ஆ அஹ ஹ ஹா ஆ

எழில் நிறைந்த கோலங்கள்

எண்ணிறந்த ஜாலங்கள்

இதை மறந்து வாழ்ந்திடும்

மனிதர் என்ன ஜென்மங்கள்

விழித்திருந்தும் தூங்குவோர்க்கு

விழியிரண்டு ஏனடா

வருவார் போவார் நிலையாய்

இங்கே நீதான் உண்டு

அழகே ஹா

இங்கே இறைவன் என்னும் கலைஞன்

என்றோ உலகை நன்றாய் படைத்தான்

உண்மைகள் வந்து என் மனத்தாட

வார்த்தைகள் இல்லை நான் கவிபாட

என்னென்ன அழகே ஓ.

இங்கே இறைவன் என்னும் கலைஞன்

என்றோ உலகை நன்றாய் படைத்தான்.

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்