சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:என்னை பெத்த ராசா

ஆண்டு:1989

பாடியவர்கள்:மனோ, சித்ரா

வரிகள்:பிறைசூடன்

இசை:இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி

சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி

சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி

சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி

இந்த குரல் கேட்குதா

இன்பம் தன்னை தூண்டுதா

அன்பு கொள்ள காலம் நேரம் ஏது

அன்பு கொள்ள காலம் நேரம் ஏது

சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி

சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி

வானத்து அம்புலியை

வரவழைக்க வேணும் என்று

தனியாக தவம் இருந்து

வெகுநாளும் வேண்டி நின்றேன்

வானத்து அம்புலியை

வரவழைக்க வேணும் என்று

தனியாக தவம் இருந்து

வெகுநாளும் வேண்டி நின்றேன்

எந்தன் தவம்தான் பலிக்க

தெய்வம் வரம் தந்ததம்மா

அம்புலியும் பூமி தன்னில்

உன் உருவில் வந்ததம்மா

வீதி வழி போனால் வெள்ளி ரதம்

தரையில் நடந்தாலே தங்க ரதம்

உன்னை என்னை தெய்வம் இணைத்தது

சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி

சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி

சிறு வீணை தான் எடுத்து

விரலாலே சுருதி எழுப்பி

குறுநகையாள் பாடுவதை

குறும்புடனே கேட்டிரோ

சிறு வீணை தான் எடுத்து

விரலாலே சுருதி எழுப்பி

குறுநகையாள் பாடுவதை

குறும்புடனே கேட்டிரோ

பாடல் தனில் நீ மயங்கி

பைங்கொடியை வேண்டுமென்றாய்

குரல்தனிலே நீ கிறங்கி

குலக்கொடியை வேண்டுமென்றாய்

ஈசன் அருள் உனக்கே இருந்தது

ஏந்திழையின் மனமும் இணைந்தது

நம்மை அன்புதானே இணைத்தது.

சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி

சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி

இந்த குரல் கேட்குதா

இன்பம் தன்னை தூண்டுதா

அன்பு கொள்ள காலம் நேரம் ஏது

அன்பு கொள்ள காலம் நேரம் ஏது

சொந்தம் ஒன்றை தேடும் அன்னக்கிளி

சொல்லிச் சொல்லி பாடும் அன்னக்கிளி

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்