உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ உருகும் மனமே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : எல்லாமே என் காதலி 

ஆண்டு:1995

இசை : M.M.கீரவாணி

பாடியவர் :  மனோ, சித்ரா

வரிகள்: பிறைசூடன்

மூலம்:Criminal (ஹிந்தி)

✨✨✨✨✨✨✨✨✨

உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ

உருகும் மனமே அது நீ கண்ட பேரின்பமோ

உலகினில் நாளும் காணாத ஈடு இல்லாத

தெய்வ பந்தம் இதுவோ

கதிரோளி மாறி போனாலும் மாறி போகாத

உண்மை சொந்தம் இதுவோ

அந்த தெய்வீக பந்தத்தில் உண்டான உறவிது

உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ

உருகும் மனமே அது நீ கண்ட பேரின்பமோ

மனதினில் ஒ.. ஒ.. ஒ.. தீபமாக வந்த பொன் மானே 

விழிகளும்  ஒ.. ஒ.. ஒ.. தெய்வமாக காணும் பூந்தேனே 

உயிர் மொழி நீயடி உனக்கென நானடி 

உயிர் போனாலும் போகாது நம் அன்பு சாட்சிகள் 

உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ 

அன்பிலே வாழுதிங்கே இன்பப் பேராலயம் 

மண்ணகம் போற்றும் இந்த உயிர்கள் சரணாலயம் 

வானமே மாறினும் காலமே தேயினும் 

மனம் தான் தீண்டும் உயிர் காதல் மறையாது அழியாது 

உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ

உருகும் மனமே அது நீ கண்ட பேரின்பமோ 

உலகினில் நாளும் காணாத ஈடு இல்லாத 

தெய்வ பந்தம் இதுவோ 

கதிரோளி மாறி போனாலும் மாறி போகாத 

உண்மை சொந்தம் இதுவோ 

அந்த தெய்வீக பந்தத்தில் உண்டான உறவிது 

உயிரே உயிரே இது தெய்வீக சம்பந்தமோ 

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்