சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் :  வெள்ளை ரோஜா

பாடியவர்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம், எஸ்.ஜானகி

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்

பாடும் நேரம்

ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்

ஆடும் காலம்

பெண் : புது நாணம் கொள்ளாமல்

ஒரு வார்த்தை இல்லாமல்

மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும்

காதல் யோகம்

பெண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்

பாடும் நேரம்

ஆண் : ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்

ஆடும் காலம்

பெண் : சந்தனக் காடு

நானுன் செந்தமிழ் ஏடு

ஆண் : மான் விழி மாது

நீயோ மன்மதன் தூது

பெண் : மேகத்துக்குள் மின்னல் போலே

நின்றாயே

மின்னல் தேடும் தாழம்பூவாய்

நானும் வந்தேனே

ஆண் : தாகம் தீர்க்கும் தண்ணீர் போலே

நீயும் வந்தாயே

தாவிப் பாயும் மீனைப் போலே

நானும் ஆனேனே

பெண் : விண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை

உன்னில் இங்கே கண்டேனே

ஆண் : கள்ளில் இல்லா இன்பம் உந்தன்

சொல்லில் இங்கே கண்டேனே

பெண் : லலலல லலலல லலலல லலலல

ஆண் : லலலல

ஆண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்

பாடும் நேரம்

பெண் : ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்

ஆடும் காலம்

ஆண் : சென்னில மேடில்

தண்ணீர் சேர்ந்தது போலே

பெண் : ஆனது நெஞ்சம்

நீயென் வாழ்க்கையின் சொந்தம்

ஆண் : என்றும் என்றும்

எந்தன் உள்ளம் உன்னோடு

எந்தன் நெஞ்சில் பொங்கும்

அன்பில் நாளும் நீராடு

பெண் : கங்கை வெள்ளம் வற்றும்போதும்

காதல் வற்றாது

திங்கள் வானில் தேயும்போதும்

சிந்தை தேயாது

ஆண் : மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும்

உன்மேல் அன்பு மாறாது

பெண் : உன்னை அன்றித் தென்றல் கூட

எந்தன் தேகம் தீண்டாது

ஆண் : லலலல லலலல லலலல லலலல

பெண் : லலலல

பெண் : சோலைப் பூவில் மாலைத் தென்றல்

பாடும் நேரம்

ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்

ஆடும் காலம்

ஆண் : புது நாணம் கொள்ளாமல்

ஒரு வார்த்தை இல்லாமல்

மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும்

காதல் யோகம்

ஆண் மற்றும் பெண் :

சோலைப் பூவில் மாலைத் தென்றல்

பாடும் நேரம்

ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும்

ஆடும் காலம்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்