அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வெச்சேன் மாலை

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : ஆவாரம்பூ

பாடல் : அடுக்கு மல்லி

வரிகள் : கங்கை அமரன்

பாடியவர்கள் : SPB, ஜானகி

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வெச்சேன் மாலை

மணக்கும் ஒரு மணிக்கழுத்தில் விழுந்ததிந்த வேளை

அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வெச்சேன் மாலை

மணக்கும் ஒரு மணிக்கழுத்தில் விழுந்ததிந்த வேளை

அச்சாரம் அப்பத் தந்த முத்தாரம்

அதை அடகு வெக்காம காத்து வந்தேன் இந்நாளா

தள்ளி விலகி நிக்காம தாளம் தட்டு கண்ணாளா

(அடுக்கு மல்லி)

வெற்றி மாலை போட்டானய்யா கெட்டிக்கார ராசா

முத்துப் போல கண்டானங்கே மொட்டுப் போல ரோசா

சொந்தம் இங்கே வந்தாளுன்னு சொன்னான் அவன் லேசா

காணாததை கண்டான் அப்ப ஆனானய்யா பாஸா

என்னாச்சு இந்த மனம் பொன்னாச்சு

அட எப்போதோ ரெண்டு மட்டும் ஒண்ணாச்சு

அட வாய்யா மச்சானே யோகம் இப்போ உண்டாச்சு

(அடுக்கு மல்லி)

மெட்டுப்போடு செந்தாழம்பூ கெட்டி மேளம் போட

எட்டிப்பாக்கும் ஆவாரம்பூ வெக்கத்தோடு ஓட

அக்கம் பக்கம் சொல்லாமத்தான் உள்ளுக்குள்ளே வாட

சுத்தும் மனம் நில்லாமத்தான் கெட்டானய்யா கூட

சந்தோஷம் தங்கத்துக்கு சந்தோஷம்

இப்போதும் கிட்ட வரும் எப்போதும்

அட வாய்யா ராசாவே அய்யா இப்போ உன் நேரம்

(அடுக்கு மல்லி)


✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்