சோலைப் பூந்தென்றலில் ஊஞ்சலாடும்

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: பூவே பெண் பூவே

இசை: இளையராஜா

பாடியவர்: K.J.Yesudas

✨✨✨✨✨✨✨✨✨

சோலைப் பூந்தென்றலில்

ஊஞ்சலாடும் செல்லப்பைங்கிளி

எந்தன் பால கோபாலனே தங்க

மின்னல் போலும் வாழ்க நீ

வண்ணம் பொங்க குளிப்பாட்டி

தாலாட்டு சொல்வேனே சின்னய்யா

இந்த மின்னல் மணிச்சிற்பம்

சாமந்தி தோட்டத்து பூவைய்யா

உன்னை நன்மை அணுக

கண்ணில் கண்ணேர் அழிய பிள்ளைத்தோஷம்

விலக உன்னைப் போற்றும் உள்ளமே ஹோய்

(சோலைபூந்தென்றலில்

ஊஞ்சலாடும் செல்லப்பைங்கிளி

எந்தன் பால கோபாலனே தங்க

மின்னல் போலும் வாழ்க நீ)

 குறிஞ்சிப் பூக்களில் மலர்ந்த புன்னகை

கரும்பு நாவிலோ குறும்பு கொஞ்சிடும்

குறும்பு கொஞ்சலில்

அரும்பு வார்த்தையில்

மயங்கும் என் மனம் மலர்ந்து ஆடிடும்

நோயின்றி என் பிள்ளை நாளும் வாழ

நூறாண்டு காலங்கள் மண்ணில் வாழ

 தெய்வத்தின் சந்நிதி நாளும் தேடி

தீபங்கள் ஏற்றுவேன் ராகம் பாடி

தாமரை பொன் கன்னத்தில்

சாந்து பொட்டு தீட்டுவேன்

சொல்லேறு நான் போகும்

கண்கள் பட்டுண்டாகும் தோஷம் மாறுமே

சோலைபூந்தென்றலில்

ஊஞ்சலாடும் செல்லப்பைங்கிளி

எந்தன் பால கோபாலனே தங்க

மின்னல் போலும் வாழ்க நீ

சரஸ்வதி வரம்

நிறைந்த சாஸ்திரம்

அறிந்திடும் குணம் தெளிந்திடும் மனம்

அறிஞன் என்றுனை புகழ்ந்து போற்றவே

குரு கடாட்சமே பெறும் குமாரனே

 நல்லோர்கள் வாழ்த்துக்கள்

உன்னைச் சேரும்

நாளைக்கு உன் பேரை தேசம் கூறும்

எப்போதும் அஞ்சாத நெஞ்சம் வேண்டும்

ராஜாங்கம் நீ ஆளும் காலம் தோன்றும்

எந்த தேசமாயினும் எந்த வேஷமாயினும்

தந்தையின் நேசமும் தாயவள் பாசமும்

இங்கு காக்குமே ...

சோலைபூந்தென்றலில்

ஊஞ்சலாடும் செல்லப்பைங்கிளி

எந்தன் பால கோபாலனே தங்க

மின்னல் போலும் வாழ்க நீ..

வண்ணம் பொங்க குளிப்பாட்டி

தாலாட்டு சொல்வேனே சின்னய்யா ...

இந்த மின்னல் மணிச்சிற்பம்

சாமந்தி தோட்டத்து பூவைய்யா

உன்னை நன்மை அணுக

கண்ணில் கண்ணேர் அழிய பிள்ளைத்தோஷம்

விலக உன்னைப் போற்றும் உள்ளமே ஹோய்

 (சோலைபூந்தென்றலில்..)

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்