நீங்காத எண்ணம் ஒன்று நெஞ்சோடு உண்டு

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : விடியும் வரை காத்திரு 

பாடல்  : வாலி

பாடியவர்கள் : எஸ். ஜானகி மற்றும் மலேசியா வாசுதேவன்

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : நீங்காத எண்ணம் ஒன்று

நெஞ்சோடு உண்டு


பெண் : ம்… ஹஹா என்னங்க அது


ஆண் : ஒரு ஷாஜஹான் ஒரு தேவதாஸ்

அது போலத்தான் உன்னோடு நான்

ஈரேழு ஜென்மம் வர வேண்டும் ம்……


பெண் : நீங்காத எண்ணம் ஒன்று

நெஞ்சோடு உண்டு

ஒரு ஜானகி ஒரு கண்ணகி

அது போலத்தான் உன்னோடு நான்

ஈரேழு ஜென்மம் வர வேண்டும் ம்…


ஆண் : மேகம் மிதக்குது

ஆகாயம் மேலே பறக்குது

மேகம் மிதக்குது

ஆகாயம் மேலே பறக்குது

பெண் : ஆ…….


ஆண் : அது போலவே உனைக் காண

நான் அலை பாய்கிறேன்

பெண் : லல லல லல லா

மழையாக மாறுவேன்

மடி மீது சேருவேன்

நீராட்டுவேன் உன் மேனியை

அன்பே உன் உறவினை அனுபவிப்பேன்


ஆண் : நீங்காத எண்ணம் ஒன்று

நெஞ்சோடு உண்டு


ஆண் : காணும் கனவுகள்

நீ கொண்ட ஆசை நினைவுகள்

காணும் கனவுகள்

நீ கொண்ட ஆசை நினைவுகள்

பெண் : ஆ…


ஆண் : என்னென்ன சொல் இந்நாளிலே

நிறைவேற்றுவேன்

பெண் : லல லல லல லா

தீராத ஆசைகள் ஓர் நாளில் தீருமோ

வான் மாறலாம் நிலம் மாறலாம்

மாறாமல் இருவரும் இணைந்திருப்போம்


ஆண் : நீங்காத எண்ணம் ஒன்று

நெஞ்சோடு உண்டு

ஒரு ஷாஜஹான் ஒரு தேவதாஸ்

அது போலத்தான் உன்னோடு நான்

ஈரேழு ஜென்மம் வர வேண்டும் ம்…


பெண் : நீங்காத எண்ணம் ஒன்று

நெஞ்சோடு உண்டு

ஒரு ஜானகி ஒரு கண்ணகி

அது போலத்தான் உன்னோடு நான்

ஈரேழு ஜென்மம் வர வேண்டும் ம்…

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்