வளையோசை கல கல கலவென

 ✨✨✨✨✨✨✨✨✨

வாலிப கவிஞர் வாலி ஐயா பிறந்தநாள் சிறப்பு பாடல்... 

கவிஞர் வாலி அவர்கள் எத்தனையோ பாடல் எழுதியிருந்தாலும்

இந்த பாடல் எனக்கு எப்போதும் சிறப்பாகவே தெரியும்.... 

"ராகங்கள் தாளங்கள் நூறு ராஜா உன் பேர் சொல்லும் பாரு" 

✨✨✨✨✨✨✨✨✨

படம்:சத்தியா 

ஆண்டு: 1988

கவிஞர்: வாலி

பாடியவர்கள்: பாலு சார் + லதா ஜி

இசை: இளையராஜா

வளையோசை கல கல கலவென

கவிதைகள் படிக்குது குளு குளு

தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலு சிலு சிலு என

சிறு விரல் பட பட துடிக்குது

எங்கும் தேகம் கூசுது

சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்

கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்

வளையோசை கல கல கலவென

கவிதைகள் படிக்குது குளு குளு

தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலு சிலு சிலு என

சிறு விரல் பட பட துடிக்குது

எங்கும் தேகம் கூசுது

ஒரு காதல் கடிதம் விழி போடும்

உன்னை காணும் சபலம் வர கூடும்

நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்

நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்

கண்ணே என் கண் பட்ட காயம்

கை வைக்க தானாக ஆறும்

முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்

சென் மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்

வளையோசை கல கல கலவென

கவிதைகள் படிக்குது குளு குளு

தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலு சிலு சிலு என

சிறு விரல் பட பட துடிக்குது

எங்கும் தேகம் கூசுது

சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்

கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்

வளையோசை கல கல கலவென

கவிதைகள் படிக்குது குளு குளு

தென்றல் காற்றும் வீசுது

உன்னை காணாது உருகும் நொடி நேரம்

பல மாதம் வருடம் என மாறும்

நீங்காத ரீங்காரம் நான் தானே

நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே

ராகங்கள் தாளங்கள் நூறு

ராஜா உன் பேர் சொல்லும் பாரு

சிந்தாமல் நின்றாடும் செந்தேனே

சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில் தான்

வளையோசை கல கல கலவென

கவிதைகள் படிக்குது குளு குளு

தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலு சிலு சிலு என

சிறு விரல் பட பட துடிக்குது

எங்கும் தேகம் கூசுது

சின்ன பெண் பெண்ணல்ல வண்ண பூந்தோட்டம்

கொட்டட்டும் மேளம் தான் அன்று காதல் தேரோட்டம்

வளையோசை கல கல கலவென

கவிதைகள் படிக்குது குளு குளு

தென்றல் காற்றும் வீசுது

சில நேரம் சிலு சிலு சிலு என

சிறு விரல் பட பட துடிக்குது

எங்கும் தேகம் கூசுது.......

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்