உன்னைக் காணாமல் நான் ஏது உன்னை எண்ணாத நாள் ஏது

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: கவிதை பாடும் அலைகள்

பாடல்: கங்கைஅமரன்

பாடியவர்கள்: K S சித்ரா, அருண்மொழி

இசை: இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

உன்னைக் காணாமல் நான் ஏது

உன்னை எண்ணாத நாள் ஏது

உன்னைக் காணாமல் நான் ஏது

உன்னை எண்ணாத நாள் ஏது

பூங்குயிலே

பைந்தமிழே

என்னுயிரே நீ தான்

உன்னைக் காணாமல் நான் ஏது

உன்னை எண்ணாத நாள் ஏது

கம்பனின் பிள்ளை நான்

காவியம் பாட வந்தேன்

காவிரிக் கரையெல்லாம்

காலடி தேடி நின்றேன்

கவிஞனைத் தேடி

கவிதை கேட்க வந்தேன்

வானமும் பூமி எங்கும்

பாடிடும் பாடல் கேட்கும்

ஜீவனை ஜீவன் சேரும்

ஆயிரம் ஆண்டு காலம்

இனி எந்நாளும் பிரிவேது

அன்பே

உன்னைக் காணாமல் நான் ஏது

உன்னை எண்ணாத நாள் ஏது

பூங்குயிலே

பைந்தமிழே

என்னுயிரே

நீ தான்

உன்னைக் காணாமல் நான் ஏது

உன்னை எண்ணாத நாள் ஏது

ஆயிரம் காலம் தான்

வாழ்வது காதல் கீதம்

கண்ணனின் பாடலில்

கேட்பது காதல் வேதம்

பிரிவினை ஏது

இணைந்து பாடும் போது

காவியம் போன்ற காதல்

பூமியை வென்று ஆளூம்

காலங்கள் போன போதும்

வானத்தைப்போல வாழும்

இது மாறாது மறையாது

அன்பே... ஏ ஏ.

உன்னைக் காணாமல் நான் ஏது

உன்னை எண்ணாத நாள் ஏது

பூங்குயிலே

பைந்தமிழே

என்னுயிரே

நீ தான்

உன்னைக் காணாமல் நான் ஏது

உன்னை எண்ணாத நாள் ஏது

உன்னைக் காணாமல் நான் ஏது

உன்னை எண்ணாத நாள் ஏது

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்