கஜுராஹோ கனவில் ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : ஒரு நாள் ஒரு கனவு 

பாடல் : கஜுராஹோ கனவில்

பாடலாசிரியர் :  பழனி பாரதி 

பாடகர்கள் : ஹரிஹரண் மற்றும் ஸ்ரேயா கோஷல்

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : கஜுராஹோ கனவில்

ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே

அறியாதோர் மனதிலே ரகசிய

வாசல் திறக்குதே மெல்ல மெல்ல

விரலில் திரன திம் தனா துள்ளுகின்ற

பொழுதில் இனிய கீர்த்தனா நான்

உன்னுள்ளே உன்னுள்ளே சிறகின்

மொழிகளை பழகலாம்

ஆண் : கஜுராஹோ கனவில்

ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே

அறியாதோர் மனதிலே ரகசிய

வாசல் திறக்குதே கஜுராஹோ

கஜுராஹோ

பெண் : என் தேகம் முழுவதும்

மின்மினி மின்மினி ஓடுதே

மாயங்கள் செய்கிறாய் மார்பினில்

சூரியன் காயுதே

ஆண் : பூவினுள் பனி துளி

தூறுது தூறுது தூறுதே

பனியோடு தேன் துளி

ஊருது ஊருது ஊருதே

பெண் : ஆ ஆ காமனின்

வழிபாடு உடலினில்

கொண்டாடு

தீபம் போல் என்னை

நீ ஏற்று காற்றோடு காற்றாக

அந்தரங்க வழி மிதக்கலாம்

கஜுராஹோ கனவில்

ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே

அறியாதோர் மனதிலே ரகசிய

வாசல் திறக்குதே

ஆண் : கஜுராஹோ

கஜுராஹோ

நீராக உன் உடல்

நெளியுது வளையுது மூழ்கவா

தண்டோடு தாமரை பூவினை

கைகளில் ஏந்தவா

பெண் : மேலாடை நீயென

மேனியில் நான் உனை

சூடவா நீ தீண்டும் போதிலே

மோகன ராட்டினம் ஆடவா

ஆண் : பகலுக்கு தடை

போடு இரவினை எடை

போடு

பெண் : லாலல லாலா

லலலல லா லா

ஆண் : எங்கே நான் என்று

நீ தேடு ஈரங்கள் காயாமல்

இன்ப ராக மழை

பொழியலாம்

ஆண் & பெண் : கஜுராஹோ கனவில்

ஓர் சிற்பம் கண்ணில் மிதக்குதே

அறியாதோர் மனதிலே ரகசிய

வாசல் திறக்குதே

ஆண் : கஜுராஹோ

கஜுராஹோ

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்