கங்கை ஆற்றில் நின்று கொண்டு

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:ஆயிரம் நிலவே வா

பாடகி : பி. சுசீலா

ஆண்டு:1983

இசை  : இளையராஜா

வரிகள்:புலமைப் பித்தன்

✨✨✨✨✨✨✨✨✨

கங்கை ஆற்றில்

நின்று கொண்டு

நீரைத் தேடும் பெண்மான் இவள்

கண்ணை மூடி காட்சி தேடி

இன்னும் எங்கே செல்வாள் இவள்

தன்னையே தான் நம்பாது

போவதும் ஏன் பேதை மாது

கங்கை ஆற்றில்

நின்று கொண்டு

நீரைத் தேடும் பெண்மான் இவள்

பொய் போலவே

வேஷம் மெய் போட்டது

அந்த மெய்யே

பொய்யாய்க் கொண்டாள்

ஓர் ஆயிரம் சாட்சி யார் கூறினும்

அவை எல்லாம் வேஷம் என்றாள்

 தன் கண் செய்த மாயம்

பெண்மேல் என்ன பாவம்

தன் நெஞ்சோடு தீராத சோகம்

இப்போராட்டம் எப்போது தீரும் இனி

கங்கை ஆற்றில்

நின்று கொண்டு

நீரைத் தேடும் பெண்மான் இவள்

 பொய் மானையே

அன்று மெய் மான் என

அந்த சீதை பேதை ஆனாள்

மெய் மானையே

இன்று பொய் மானென

இந்த கோதை பேதை ஆனாள்

பொய் நம்பிக்கை அங்கே

வீண் சந்தேகம் இங்கே

கண் ஒவ்வொன்றும்

வெவ்வேறு பார்வை

என்றாலும் ஏமாற்றம் ஒன்றானது

 கங்கை ஆற்றில்

நின்று கொண்டு

நீரைத் தேடும் பெண்மான் இவள்

கண்ணை மூடி காட்சி தேடி

இன்னும் எங்கே செல்வாள் இவள்

தன்னையே தான் நம்பாது

போவதும் ஏன் பேதை மாது

கங்கை ஆற்றில்

நின்று கொண்டு

நீரைத் தேடும் பெண்மான் இவள்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்