ஜெகதானந்த காரகா ஜெய ஜானகி பிராண நாயகா

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்: ஸ்ரீராமராஜ்யம் 

ஆண்டு: 2011 

இசை: இளையராஜா வரிகள்: பிறைசூடன் 

பாடியவர்கள்:எஸ்.பி.பி & சின்மயி 

✨✨✨✨✨✨✨✨✨

ஜெகதானந்த காரகா

ஜெய ஜானகி பிராண நாயகா

ஆஹா......

ஜெகதானந்த காரகா

ஜெய ஜானகி பிராண நாயகா

சுபவாழ்த்துக்கள்

பெரும் புவி நாயகா

ஜெகதானந்த காரகா

ஜெய ஜானகி பிராண நாயகா

சுபவாழ்த்துக்கள்

பெரும் புவி நாயகா

மங்கள ராகமும் நீயாக

யுக தர்மத்தின் வடிவமும் நீயாக

எம் ஜீவனமே இனி ராமனின் சொல் காக்க

நின் ஆட்சியில் அனுதினம் நலம் காக்க

சுப சேதிகள் எழுதிய நிலம் பூக்க

உன் நாட்டில் அனைவரும் அன்பினில் கை கோர்க்க

ஜெகதானந்த காரகா

ஜெய ஜானகி பிராண நாயகா

சுபவாழ்த்துக்கள்

பெரும் புவி நாயகா

நேர்மை பொன்மனமே பூர்ண கும்பமுனை

வாழ்த்து பாக்கள் படிக்க

நாட்டை ஆளும்படி தர்ம தேவதைகள்

ராகமாலை இசைக்க

நான்கு வேதமுனை கண்டு மெய் மறந்து

பாரிஜாதம் சேர்க்க

நீதி தேவதைகள் சங்கம் தான் முழங்க

வானம் நீரை தெளிக்க

ராஜா மகுடமே நிலைத்ததே

நவரத்ன காந்தியும் மிளிர்ந்ததே

சூர்யவம்ச சிம்ஹாசனம்

வரவேற்று பாடும் எழில் வந்தனம்

சாம்ராஜ்ய லக்ஷ்மி நின் பாதம் பட்டதும்

புனிதம் அடைந்து பொங்கும்

ஜெகதானந்த காரகா

ஜெய ஜானகி பிராண நாயகா

ஆஹா......

ஜெகதானந்த காரகா

ஜெய ஜானகி பிராண நாயகா

சுபவாழ்த்துக்கள்

பெரும் புவி நாயகா

ஜெகதானந்த காரகா

ஜெய ஜானகி பிராண நாயகா

சுபவாழ்த்துக்கள்

பெரும் புவி நாயகா

ராமன் ஆளுகையை காமதேனு என

வானம் வாழ்த்து கூறும் 

ராம சாசனமே தேவை அல்ல என்று

கடலும் கைகள் கூப்பும்

ராம தரிசனத்தில் தீரும் கரிசனத்தில்

கல்லும் சிலையும் ஆகும்

ராம ராஜ்ஜியத்தில் சாதி பேதமின்றி

தர்மம் ஆட்சி ஏறும்

ராம மந்திரமே தாரகம்

உயர் பக்தி முக்தியின் தாயகம்

ராம நாமமே அம்ருதம்

ஸ்ரீ ராம கீர்த்தனை சுந்தரம்

ஸ்ரீ ராமச்சந்திருவின் ஆட்சி அம்சமே

பூமி அன்பில் செழிக்க

ஜெகதானந்த காரகா

ஜெய ஜானகி பிராண நாயகா

ஆஹா......

ஜெகதானந்த காரகா

ஜெய ஜானகி பிராண நாயகா

சுபவாழ்த்துக்கள்

பெரும் புவி நாயகா

ஜெகதானந்த காரகா

ஜெய ஜானகி பிராண நாயகா

சுபவாழ்த்துக்கள்

பெரும் புவி நாயகா

மங்கள ராகமும் நீயாக

யுக தர்மத்தின் வடிவமும் நீயாக

எம் ஜீவனமே இனி ராமனின் சொல் காக்க

நின் ஆட்சியில் அனுதினம் நலம் காக்க

சுப சேதிகள் எழுதிய நிலம் பூக்க

உன் நாட்டில் அனைவரும் அன்பினில் கை கோர்க்க

ஜெகதானந்த காரகா

ஜெய ஜானகி பிராண நாயகா

சுபவாழ்த்துக்கள்

பெரும் புவி நாயகா

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்