உறவுகள் தொடர்கதை

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : அவள் அப்படித்தான்

பாடல் : உறவுகள் தொடர்கதை

பாடலாசிரியர் :   கங்கைஅமரன் 

பாடகர்கள் : கே.ஜே. யேசுதாஸ்    

இசை : இளையராஜா

✨✨✨✨✨✨✨✨✨

உறவுகள் தொடர்கதை

உணர்வுகள் சிறுகதை

ஒரு கதை என்றும்

முடியலாம் முடிவிலும்

ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே

✨

உன் நெஞ்சிலே

பாரம் உனக்காகவே

நானும் சுமைதாங்கியாய்

தாங்குவேன்

✨

உன் கண்களின்

ஓரம் எதற்காகவோ ஈரம்

கண்ணீரை நான்

மாற்றுவேன்

✨

வேதனை தீரலாம்

வெறும்பனி விலகலாம்

வெண்மேகமே புது

அழகிலே நானும்

இணையலாம்

✨

உறவுகள் தொடர்கதை

உணர்வுகள் சிறுகதை

ஒரு கதை என்றும்

முடியலாம் முடிவிலும்

ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே

✨

வாழ்வென்பதோ

கீதம் வளர்கின்றதோ நாதம்

நாள் ஒன்றிலும் ஆனந்தம்

✨

 நீ கண்டதோ

துன்பம் இனி வாழ்வெல்லாம்

இன்பம் சுக ராகமே

ஆரம்பம்

✨

நதியிலே புது

புனல் கடலிலே கலந்தது

நம் சொந்தமோ இன்று

இணைந்தது இன்பம் பிறந்தது

✨

உறவுகள் தொடர்கதை

உணர்வுகள் சிறுகதை

ஒரு கதை என்றும்

முடியலாம் முடிவிலும்

ஒன்று தொடரலாம்

இனியெல்லாம் சுகமே

இனியெல்லாம் சுகமே


✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்