நாடு பார்த்ததுண்டா இந்த நாடு பார்த்ததுண்டா

 ✨✨✨✨✨✨✨✨✨

✨✨✨✨✨✨✨✨✨

படம்: காமராஜ்

பாடல்: வாலி

பாடகர் : திப்பு

இசை : *இளையராஜா

✨✨✨✨✨✨✨✨

குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்

ஆண் : நாடு பார்த்ததுண்டா

இந்த நாடு பார்த்ததுண்டா

நாடு பார்த்ததுண்டா

இந்த நாடு பார்த்ததுண்டா

தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்

குழு : இந்த நாடு முன்னேற

நாளும் உழைத்தவனை

நாடு பார்த்ததுண்டா

இந்த நாடு பார்த்ததுண்டா

நாடு பார்த்ததுண்டா

இந்த நாடு பார்த்ததுண்டா

பெண் குழு : பள்ளி அறியாத பிள்ளை பல பேரின்

முகத்தை பார்த்தானம்மா

அது ஊரு சுற்றாமல் சோறு தான் போட்டு

படிக்க வைத்தானம்மா

ஆண் குழு : மாடு பிடித்த கையில் ஏடு கொடுத்த

மகராஜன் இவன் தானம்மா

இந்த ஊரு உலகெங்கும் தேடிப் பார்த்தலும்

ஈடு எவன் தானம்மா

வலிமை இருந்த போதும்

மிக எளிமையோடு இருந்தார்

குழு : பிள்ளை உள்ளம் கொண்ட

எங்கள் கருப்பு காந்தி இவரே

ஆண் : நாடு பார்த்ததுண்டா

இந்த நாடு பார்த்ததுண்டா

ஆண் குழு : பதவி இருந்தாலும் பதவி போனாலும்

உதவி புரிவானம்மா

தன்னைப் பெற்ற தாயை விட

பிறந்த நாடுதான்

பெரிது என்பானம்மா

பெண் குழு : ஆற்று நீரையே அணைகள் கட்டியே

தேங்க வைத்தானம்மா

அங்கு தேங்கும் நீரில் மின்சாரம் எடுத்து

விளக்கேற்றி வைத்தானம்மா

ஆண் குழு : வலிமை இருந்த போதும்

மிக எளிமையோடு இருந்தார்

குழு : பிள்ளை உள்ளம் கொண்ட

எங்கள் கருப்பு காந்தி இவரே

ஆண் : நாடு பார்த்ததுண்டா

இந்த நாடு பார்த்ததுண்டா

தன் வீடு பார்க்காமல் வாழ்வு பார்க்காமல்

குழு : இந்த நாடு முன்னேற

நாளும் உழைத்தவனை

நாடு பார்த்ததுண்டா

இந்த நாடு பார்த்ததுண்டா

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்