சிவகாசி ரதியே ஏ சிரிக்கின்ற வெடியே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம்:பூ

ஆண்டு:2008

பாடியவர்:பெரிய கருப்ப தேவர்

இசை:S.S. குமரன்

வரிகள்:நா.முத்துகுமார்

✨✨✨✨✨✨✨✨✨

சிவகாசி ரதியே ஏ சிரிக்கின்ற வெடியே

உன்னை எந்தகாலம் பார்த்தது தாயே

இவ அந்தக்கால ஐஸ்வர்யாராயி

முகத்திலே தெரியுற சுருக்கத்தை போலே..

அறுபது வயசில படுத்துறாளே

உன்னை எந்தகாலம் பார்த்தது தாயே

இவ அந்தக்கால ஐஸ்வர்யாராயி

ஒத்தையடி பாதையிலே சுள்ளி பொறுக்க

மத்தியானம் வருவானு பூத்து கிடந்தேன்

ஒத்த பானை மேலே வந்த பேய பார்த்துதான்

தலை தெறிக்க ஓட்டம் புடிச்சேன்

ஏய் அய்யனாரு சாமிய காவலுக்கு வேண்டித்தான்

காதல நான் சொல்ல நினைச்சேன்

அவ பாம்பாட்டி ஒருத்தனை

பார்த்து பார்த்து சிரிச்சத

எங்க போய் சொல்லி தொலைப்பேன்

அந்த பந்தக்காலு பக்கத்துல பாரு

இவ அந்தக்கால சொக்கத்தங்க தேரு

சிவகாசி ரதியே ஏ சிரிக்கின்ற வெடியே

உன்னை எந்தகாலம் பார்த்தது தாயே

இவ அந்தக்கால ஐஸ்வர்யாராயி

பம்புசெட்டு தண்ணியிலே அவ குளிக்க

தென்னை மற உச்சியில நானும் இருப்பேன்

தென்னை மட்டை தேளு ஒன்னு என்னை கடிக்க

கத்திக்கிட்டு பல்ல இளிப்பேன்

ஏ கெண்ட மீனைப்போலத்தான்

துள்ளிக்கிட்டு திரிஞ்சவ

கருவாடா வந்து நிக்கிறா

இப்ப நல்ல நேரம் பார்க்கல

தாம்பூலமும் மாத்தள

தாலியத்தான் கட்டப்போறேன்

உன்னை எந்தக்காலம் பார்த்தது தாயே

இவ இத்துப்போன ஐஸ்வர்யாராயி

சிவகாசி ரதியே ஏ சிரிக்கின்ற வெடியே

உன்னை எந்தகாலம் பார்த்தது தாயே

இவ அந்தக்கால ஐஸ்வர்யாராயி

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்