மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்

 ✨✨✨✨✨✨✨✨

படம்:சின்ன பசங்க நாங்க

ஆண்டு:1992

வரிகள்:வாலி

இசை:இளையராஜா

பாடியவர்கள்:S.P.B & S.ஜானகி

✨✨✨✨✨✨✨✨

மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்

மானாடும் போது மனமாடக் கண்டேன்

மானானது யாரோ மகராணியே நீயோ

மனமாடவே தூண்டும் மாதேவியே நீயோ

மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்

மானாடும் போது மனமாடக் கண்டேன்

வெல்வெட்டுக் கன்னம் தொட்டு

வைக்கின்ற முத்தம் எல்லாம்

கல்வெட்டு போலே நிற்கும்

கண்ணே நம் காலம் எல்லாம்

நேசித்து நெஞ்சில் வைத்து

நீண்ட காலம்

யாசித்த பெண்ணுக்கின்று ராஜ யோகம்

யோசித்து ஒவ்வொன்றாக

காதல் பாடம்

வாசித்து அர்த்தம் சொல்லும் வேளையாகும்

மை விழியோரம் ஐவகை பாணம்

மன்மதன் போடும் மங்கல நேரம்

பொன் மாலைப் பொழுதினிலே

மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்

மானானது யாரோ மகராஜனே நீயோ..

உள்ளத்தின் உண்டியலில்

உன் ஆசை எண்ணங்களை

சேமித்து வைத்த கன்னி

சிந்தித்தாள் உன்னை எண்ணி

சேமித்த அன்புத் தேனை

நானும் வாங்க

சாமத்தில் சாமந்திப் பூ நாளும் ஏங்க

பூவுக்கு வந்ததின்று

பூஜை நேரம்

போகட்டும் வெட்கம் இன்று காத தூரம்

மீதங்கள் இன்றி மோகங்கள் கூட

மோகங்கள் நூறு ராகங்கள் பாட

சங்கீத மயக்கத்திலேஏ..

மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்

மானாடும் போது மனமாடக் கண்டேன்

மானானது யாரோ மகராஜனே நீயோ

மனமாடவே தூண்டும் மாதேவனே நீயோ

மயிலாடும் தோப்பில் மானாடக் கண்டேன்

மானாடும் போது மனமாடக் கண்டேன்

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்