பூவே இளைய பூவே

 ✨✨✨✨✨✨✨✨✨

படம் : கோழி கூவுது

வரிகள் :  வைரமுத்து 

பாடியவர்கள்: மலேசியா வாசுதேவன் மற்றும் குழு

இசை : இளையராஜா 

✨✨✨✨✨✨✨✨✨

ஆண் : பூவே இளைய பூவே

வரம் தரும் வசந்தமே

மலர் மீது தேங்கும் தேனே

எனக்குத் தானே எனக்குத் தானே

ஆண் : பூவே இளைய பூவே

வரம் தரும் வசந்தமே

மலர் மீது தேங்கும் தேனே

எனக்குத் தானே எனக்குத் தானே

குழு : …………………………

ஆண் : குழல் வளர்ந்து அலையானதே

இரவுகளின் இழையானதே

குழல் வளர்ந்து அலையானதே

இரவுகளின் இழையானதே

விழி இரண்டு கடலானதே

எனது மனம் படகானதே

இளம் பளிங்கு நகம் சேர்த்ததே

நிலவு அதில் முகம் பார்த்ததே

இனிக்கும் தேனே எனக்கு தானே

ஆண் : பூவே இளைய பூவே

வரம் தரும் வசந்தமே

மலர் மீது தேங்கும் தேனே

எனக்குத் தானே எனக்குத் தானே

குழு : ………………………

ஆண் : இளஞ்சிரிப்பு ருசியானது

அது கனிந்து இசையானது

குயில் மகளின் குரலானது

இருதயத்தில் மழை தூவுது

இரு புருவம் இரவானது

இருந்தும் என்ன வெயில் காயுது

இனிக்கும் தேனே எனக்கு தானே

ஆண் : பூவே இளைய பூவே

வரம் தரும் வசந்தமே

மலர் மீது தேங்கும் தேனே

எனக்குத் தானே எனக்குத் தானே

✨✨✨✨✨✨✨✨✨

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்